கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் முதல் பருவ சாகுபடிக்கு ஜூன் முதல் தேதியில் தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். முன்னதாக கால்வாய்கள் சீரமைப்பது உண்டு. இந்த ஆண்டு அணைகளில் இருந்து பாசனத்திற்குத் தண்ணீர் ஜூன் மாதம் 28ஆம் தேதி முதல் திறந்து விடப்பட்டது. இதனால் பெரும்பாலான பாசன குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன.
தேரூர் குளம் உள்ளிட்ட இடங்களில் குளத்தில் உள்ள தண்ணீரை வைத்து நெல் பயிரிடப்பட்டு, தற்போது நெல் அமோக விளைச்சலுடன் அறுவடைக்குத் தயாராக உள்ளது. இந்நிலையில், சுமார் 100 ஏக்கர் நெல்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி முளைத்து விட்டன. மேலும் அறுவடை செய்த பகுதிகளில் கால்நடைகளுக்குத் தேவையான வைக்கோல் எடுக்க முடியாமல் நீரில் மூழ்கி அழுகி விட்டன. இந்த இழப்பிற்கு அரசின் மெத்தனமேக் காரணம் எனக் குற்றம் சாட்டிய விவசாயிகள், விவசாய விளைநிலங்களை அழித்து தேரூர் ஏலா வழியாக நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டதே இதற்குக் காரணம் என்கிறார்கள்.
குறிப்பாக, நான்கு வழிச்சாலை அமைக்கும் பொது தண்ணீர் செல்லும் நீர் நிலைகள் அமைக்கப்படவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தேரூர் பகுதியில் தண்ணீர் செல்லும் கால்வாய்கள் அடைக்கப்பட்டு சாலைகள் அமைக்கப்பட்டன. இதனால் சுமார் நூறு ஏக்கர் பயிர்களை அறுவடை செய்ய முடிமாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்க வேண்டும் என கோரிக்கை சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க:
கனமழை காரணமாக பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நாசம்... விவசாயிகள் வேதனை