கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைகளை உடைக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது. மேலும் பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களுக்கும் தடை விதித்துள்ளது. வெடி மருந்துகளும் அரசின் உரிய அனுமதி பெற்றுதான் பயன்படுத்த வேண்டும்.
ஆனால் இந்த விதிகளை மதிக்காமல் மார்த்தாண்டம் அருகே மாமூட்டுகடை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி விரிவாக்கத்திற்காக பாறைகளை உடைக்க சட்டவிரோதமாக அனுமதியின்றி டெட்டனேட்டர்கள் பயன்படுத்தப்பட்டதாக மார்த்தாண்டம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அவர்கள் கல்லூரிக்குச் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
காவல் துறையினர் வருகையையறிந்த அக்கல்லூரி நிர்வாகிகள் தலைமறைவாகியுள்ளனர். தற்போது பாறைகளை உடைக்க பயன்படுத்திய டெட்டனேட்டர்களை செயலிழக்கச் செய்யும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வேலூரில் மடிக்கணினியால் நடந்த சோகம்: சிறுமி தூக்கிட்டு தற்கொலை!