கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் சரகத்திற்குள்பட்ட தோவாளையைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி ஜானகி. இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் வங்கிகளில் கடன் பெற்றுள்ளார்.
இதுவரை கடன் தொகையை ஒழுங்காகச் செலுத்திவந்த நிலையில், அவர் கடந்த மூன்று மாதங்களாக கரோனா தடை உத்தரவு காலம் என்பதால் கடன் தொகையை செலுத்தவில்லை. இதனை அடுத்து தனியார் வங்கியின் ஊழியர்கள் இவரைத் தொடர்ந்து மிரட்டிவந்தனர்.
இந்நிலையில், அவரது வீட்டுக்குச் சென்ற ஆறு பேர் கடன் தொகை கட்டாவிட்டால் வீட்டில் வந்து அமர்ந்துகொள்வோம் என மிரட்டியதாகத் தெரிகிறது. இதனை அடுத்து அந்தப் பெண் எத்தனை முறை கெஞ்சிக் கேட்டும் அவர்கள் பணத்தைக் கட்டும்படி வற்புறுத்தினர்.
இது தொடர்பான புகார் ஆரல்வாய்மொழி காவல் துறையினருக்குச் சென்றதும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தனியார் வங்கி ஊழியர்களான நாகர்கோவிலைச் சேர்ந்த அஜி (30), அஜித்(34), பிரபு (28), அருண் (30), சுதாகர் (28), செல்வகுமார் (30) ஆகிய ஆறு பேரை கைதுசெய்தனர். பின்னர் அவர்கள் சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
கடன் தவணைத் தொகை: பெண்ணை மிரட்டிய வங்கி ஊழியர்கள் கைது - பெண்ணிற்கு வீடு புகுந்து மிரட்டல்
கன்னியாகுமரி: தோவாளை அருகே கடன் தவணைத் தொகை கட்ட முடியாத பெண்ணை வீடு புகுந்து மிரட்டிய தனியார் வங்கி ஊழியர்கள் ஆறு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.