கன்னியாகுமரி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால், மாவட்டத்தின் முக்கிய அணையான பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், 48 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் 44.93 அடியை இன்று (அக்.17) எட்டியது.
தொடர்ந்து அணைக்கு 1,500 கனஅடியாக நீர்வரத்து உள்ளது. இதனால், அணையிலிருந்து வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டதை அடுத்து கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பு அருவியிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து, சுற்றுலாப்பயணிகள் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதே போல் குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம், வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: கயிறு கட்டி பைக்கில் இழுத்துச்செல்லப்பட்ட இளைஞர்.. கடனால் நேர்ந்த கொடுமை....