ETV Bharat / state

ஐயப்ப பக்தர்கள் வருகையால் களைகட்டிய கன்னியாகுமரி!

கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் வருகை தந்து, அதிகாலையில் சூரிய உதயத்தைக் கண்டு பின் கடற்கரையில் முக்கூடல் சங்கமத்தில் புனித நீராடிச் செல்வதால் கன்னியாகுமரி களைகட்டியது.

கன்னியாகுமரி
கன்னியாகுமரி
author img

By

Published : Dec 11, 2022, 1:49 PM IST

ஐயப்ப பக்தர்கள் வருகையால் களைகட்டும் கன்னியாகுமரி

கன்னியாகுமரி: இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி, ஐந்திணைகளில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் நான்கையும் ஒருங்கிணைந்த மாவட்டமாகத் திகழ்கிறது. மேற்கில் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டமும், வடக்கு மற்றும் கிழக்கில் திருநெல்வேலி மாவட்டமும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் எல்லையாகக் கொண்டுள்ளது. மக்கள் தொகை அடர்த்தியில் தமிழகத்தில் இரண்டாம் இடம் வகிக்கிறது.

பல வரலாற்றுச் சின்னங்களைக் கொண்டிருக்கும் கன்னியாகுமரி, சுற்றுலாப் பயணிகளுக்குச் சொர்க்கமாகத் திகழ்கிறது. இங்கு, சன் செட் பாயிண்ட், கடலுக்கு நடுவே அமைந்திருக்கும் விவேகானந்தர் பாறை நினைவு மண்டம், திருவள்ளுவர் சிலை, முக்கடல் சந்திப்பில் அமைந்துள்ள காந்தி மண்டபம், பெரும் தலைவர் காமராஜர் நினைவு மணி மண்டபம், கன்னியாகுமரி அம்மன் கோயில், அரசு அருங்காட்சியம், பே வாட்ச் தீம் பார்க், மகாவீர் ஜெயின் கோயில் என எண்ணற்ற சிறப்புச் சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளது.

குமரியில் அலைமோதும் மக்கள்:

சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்கு ஆண்டிற்கு மூன்று முறை சுற்றுலா சீசன் உள்ளது. அதில் நவம்பர் 17ஆம் தேதி தொடங்கி ஜனவரி இருபதாம் தேதி வரை, ஐயப்ப பக்தர்களுடைய சீசன் ஆகும். இங்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி, வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும் அதிகம் வருகை தருகின்றனர்.

அந்த வகையில் இன்று (டிச. 11) வார விடுமுறை நாளை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகாலை முதல் கன்னியாகுமரி வந்து குவிந்தனர். மாண்டஸ் புயல் எதிரொலியால் சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாகக் குறைந்த நிலையில், தற்போது வார விடுமுறையை முன்னிட்டு மீண்டும் இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

மேலும் ஐயப்ப பக்தர்களும் ஏராளமான வருகை தந்து அதிகாலையில் சூரிய உதயத்தைக் கண்டு பின் கடற்கரையில் முக்கூடல் சங்கமத்தில் புனித நீராடியும் உற்சாகம் அடைந்தனர். இதனால் மீண்டும் கன்னியாகுமரி களைக்கட்டத் தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: பாரதியாருக்கும், புதுச்சேரிக்கும் இடையேயான பந்தம் - கலைமாமணி பட்டாபிராமன் சிறப்பு நேர்காணல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.