கன்னியாகுமரி : மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
16 தீர்த்தங்களை கொண்ட முக்கடல் சங்கமம் கன்னியாகுமரியில் இன்று அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கடலில் புனித நீராடினர்.
பின்ன பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து மாலை அணிவித்து சபரிமலை புறப்பட்டனர். இதேபோல் உள்ளூர் பக்தர்கள் பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
இதையும் படிங்க : மண்டல பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!