கன்னியாகுமரி: சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதி நிர்வாகிகளில் ஒருவர் பால லோகாதிபதி. இவரது மகன் பால பிரசாந்த் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பாக உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (ஜூன் 15) இரங்கல் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று காலை சாமிதோப்பு சென்றார். அங்கு அவரது குடும்பத்தினரைச் சந்தித்து மகன் உயிரிழப்புக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அய்யா வைகுண்டர் தலைமைப்பதி நிர்வாகி மகன் மரணம்: அமைச்சர் நேரில் ஆறுதல் - நேரில் சென்று ஆறுதல்
சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதி நிர்வாகியின் மகன் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரை மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து இன்று ஆறுதல் தெரிவித்தார்.