ETV Bharat / state

குளம் கரைப்பகுதி கட்டுவதில் முறைகேடு - ஆய்வு செய்த எம்எல்ஏ ஆஸ்டின்

author img

By

Published : May 30, 2020, 7:59 PM IST

கன்னியாகுமரி: கண்ணன்பதி பகுதியில் குளத்தில் கரைப் பகுதி கட்டுவதில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்ததை அடுத்து ஆஸ்டின் எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்து அலுவலர்களை தொடர்பு கொண்டு கட்டுமானப் பணிகளை விரைந்து கட்டி முடிக்க உத்தரவிட்டார்.

austin mla inspection on kannanpathi pool in kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம் கண்ணன்பதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்ணன்பதி குளம் உள்ளது. இந்தக் குளத்து நீரை அப்பகுதி மக்கள் விவசாய தேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தக் குளத்தின் கரைப்பகுதி இடிந்து விழுந்தது. இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி தொகுதி எம்எல்ஏ ஆஸ்டின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 25 லட்சம் செலவில் குளத்தின் கரை கட்டப்பட்டுவந்தது. குளத்தின் கரைப்பகுதி கட்டுவதில் முறைகேடு நடப்பதாகவும், குறிப்பிட்ட அளவை விட குறைவாக கரைப்பகுதி கட்டுவதாகப் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து இன்று சம்பவ இடத்திற்கு வந்த ஆஸ்டின் எம்எல்ஏ குளத்தின் கரை பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதன் பின்னர் அலுவலர்களை செல்போனில் அழைத்து பேசிய ஆஸ்டின் எம்எல்ஏ, குளத்தின் கரை பகுதி முறைப்படி உள்ள அளவிற்கு கட்ட வேண்டும். கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க... தினக்கூலி தொழிலாளர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கிய எம்எல்ஏ

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.