குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே அதீனா டிரேடர்ஸ் என்ற கடை இயங்கிவருகிறது. இக்கடையை கிராத்தூர் பகுதியைச் சேர்ந்த ஷிபு என்பவர் நடத்திவருகிறார். இந்நிலையில் இவர் இன்று (செப். 08) காலை வழக்கம்போல் கடையைத் திறக்கச் சென்றுள்ளார்.
அப்போது கடையின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளிருந்த பொருள்கள் சிதறிகிடந்துள்ளன. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஷிபு, உடனடியாக கடையிலிருந்த சிசிடிவியை ஆராய்ந்துள்ளார்.
அதில், நள்ளிரவின்போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்கள், கையில் வெட்டுக்கத்தியுடன் கடையின் கதவை உடைத்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அங்கு அவர்கள் எதிர்பார்த்த பணம் கிடைக்காததால், அங்கிருந்த ஒரு தொப்பியை எடுத்துச் சென்றிருப்பது பதிவாகியுள்ளது.
இது குறித்து ஷிபு கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிசிடிவி காட்சியைக் கொண்டு விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கூலித்தொழிலாளி அடித்துக் கொலை - ஒருவர் கைது; இருவருக்கு வலைவீச்சு!