குமரி மாவட்டம் கோட்டார் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (50). இவர் அவரது குடும்பத்தைப் பிரிந்து கடந்த 6 வருடமாக தனியாக வசித்து வந்துள்ளார். இதனால் தனியாக புதிய குடும்ப அட்டை வேண்டி, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார்.
இந்த நிலையில், அவருக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ஐயப்பன் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஐயப்பன், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தின் முன் திடீரென மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்துள்ளார்.
இதனைக்கண்ட காவல்துறையினர், ஐயப்பனிடமிருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து, அவரை மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப அட்டை வழங்காததால் முதியவர் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:தோட்டத்தில் கஞ்சா வளர்த்தவர் கைது!