ETV Bharat / state

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 7 ஆண்டுகளுக்கு பிறகு மகா லட்சதீபம் ஏற்றி வழிபாடு! - Mahalaksha deepam

கன்னியாகுமரி திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நேற்றி இரவு பக்தர்கள் மகாலட்சதீபம் ஏற்றி வழிபட்டனர்.

கன்னியாமகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பக்தர்கள் மகாலட்சதீபம் ஏற்றி வழிபாடு!

author img

By

Published : Jul 7, 2022, 12:38 PM IST

கன்னியாகுமரி: திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நேற்று (ஜூலை 6) இரவு பக்தர்கள் மகாலட்சதீபம் ஏற்றி வழிபட்டனர். இதில் ஒரு லட்சம் விளக்குகளும் ஏற்றபட்டன. குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பெண் பக்தர்கள் வருகை தந்து விளக்குகள் ஏற்றி வழிபட்டனர். ஏற்றப்பட்ட லட்ச தீபங்கள் கோயிலை ஒளி வெள்ளத்தில் பிரகாசிக்கச் செய்தது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆலய வளாகத்தில் திருப்பணிகள் நடைபெற்றுவந்ததால் கடந்த 2015ஆம் ஆண்டு சாமி விக்ரகங்கள் பாலாலய சன்னதியில் வைக்கபட்டது. இதனால் சுமார் 7 வருடங்களாக லட்சதீபம் ஏற்றபடாமல் இருந்து வந்தது.

7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பக்தர்கள் மகாலட்சதீபம் ஏற்றி வழிபாடு

இதையடுத்து தற்போது பாலாலய சன்னதியிலிருந்த சாமி விக்ரகங்கள் கருவறை அமைந்துள்ள ஒற்றைக்கல் மண்டபத்தில் வைக்கபட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து ஊர் நன்மைக்காக பொதுமக்கள் இணைந்து ஆலய சுற்று சுவரில் விளக்குகளில் வைத்து வழிபட்டனர். பெண்கள் குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விளக்கேற்றி வழிபட்டுச் சென்றனர்.

இதையும் படிங்க: 'நானும், நடராஜரும்... இடையில் நாரதர்கள் வேண்டாமே...'- தமிழிசை செளந்தரராஜன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.