கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் சுஜின் என்ற காசி. இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் குமரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சுஜின் என்ற காசி மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த புகார் குறித்து கோட்டாறு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து அதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு பெண்களிடம் லட்சக்கணக்கான ரூபாயை சுஜின் பறித்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து சுஜின் மீது ஒன்பது பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த கோட்டார் காவல் துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாங்குநேரி சிறையில் அடைத்தனர். பின்னர் நடத்திய தொடர் விசாரணையில் சுஜின் தமிழ்நாடு முழுவதும் 80க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் பரிந்துரை செய்தார். இதை ஏற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே சுஜினை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: தமிழகக்தின் நீராதார உரிமையை பறிக்கப் பார்க்கிறது மத்திய அரசு - தமிமுன் அன்சாரி