ETV Bharat / state

ஆரல்வாய்மொழியில் புலி நடமாட்டத்தால் மக்கள் பீதி - புலி நடமாட்டம்

கன்னியாகுமரி: ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாலைப் பகுதியில் சிறுத்தைப் புலி நடமாட்டம் அதிகரித்துள்ளதால், காற்றாலை ஊழியர்கள், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

windmill
author img

By

Published : Jun 28, 2019, 5:47 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் புலி, சிறுத்தை, கரடி, யானை, கடமான் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்துவருகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையை சார்ந்துள்ள கிராம பகுதிகளில் ஆரல்வாய்மொழி, குமரி - நெல்லை மாவட்டத்தின் எல்லைப் பகுதியாகும்.

ஆரல்வாய்மொழி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட காற்றாலைகள் இயங்கிவருகின்றன. தற்போது, காற்று மூலம் மின் உற்பத்தி செய்யும் சீசன் என்பதால், ஆங்காங்கே உள்ள காற்றாலைகளில் மின் உற்பத்தி கணக்கெடுக்கும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆரல்வாய்மொழியின் மூவேந்தர் நகர் பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்பு, காவலாளி ஒருவர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கண்ணெதிரே சிறுத்தைப் புலி ஒன்று தரையில் படுத்து கிடந்ததைக் கண்டு ஓட்டம் பிடித்து அலுவலகத்துக்குள் நுழைந்து அதிஷ்டவசமாக உயர்தப்பினார்.

இதேபோல், ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் நேற்று அந்த பகுதியில் ரீடிங் எடுப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, சுமார் 100 மீட்டர் தூரத்தில் சிறுத்தைப் புலி ஒன்று அவரை நோக்கி வந்து கொண்டிருந்ததைப் பார்ந்து அவருக்கு தூக்கி வாரிப்போட்டது. இதில் சுதாரித்துக் கொண்ட ஊழியர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக அலுவலகம் அடைந்து உயிர்பிழைத்தார்.

இந்த சம்பவங்களால், காற்றாலை ஊழியர்கள் மட்டுமல்லாமல் அக்கம் பக்கத்து கிராம மக்களும் பீதி அடைந்துள்ளனர்.

ஆரல்வாய்மொழி கிராமவாசியின் குற்றச்சாட்டு

ஆரல்வாய்மொழியில் வன சரக அலுவலகம் இருந்தும் கூட வனத்துறையினர் இதனை கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். வன விலங்குகள் காடுகளில் இருந்து வெளியேறி ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாலை பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் காற்றாலை ஊழியர்கள் மற்றும் ஆரல்வாய்மொழி சுற்றுவட்டார பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதுகுறித்து வனதுறைக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.Body:கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் புலி, சிறுத்தை, கரடி, யானை, கடமான், மிளா உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலையை சார்ந்து உள்ள கிராம பகுதிகளில் ஆரல்வாய்மொழி குமரி - நெல்லை மாவட்டத்தின் எல்கை பகுதியாகும்.
ஆரல்வாய்மொழி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காற்றாலைகள் இயங்கி வருகின்றன. தற்போது காற்று மூலம் மின் உற்பத்தி சீசன் காலம் என்பதால் ஆங்காங்கே உள்ள காற்றாலைகளில் மின் உற்பத்தி ரீடிங் எடுக்கும் பணிகளில் ஊழியர்கள் தீவீரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆரல்வாய்மொழியில் மூவேந்தர் நகர் பகுதியில் மூன்று நாட்களுக்கு முன் இரவு பணியில் ஈடுபட்ட இருந்த காவலாளி இரவு ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது கண்ணெதிரே சிறுத்தை புலி தரையில் படுத்து கிடந்ததை பார்த்த அங்கிருந்து ஓட்டம் பிடித்து அலுவலகத்துக்குள் நுழைந்து அதிஷ்ட வசமாக சிறுத்தை புலியிடம் இருந்து தப்பி விட்டார்.
நேற்று ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் பகல் நேரத்தில் ரீடிங் எடுப்பதற்காக காற்றாலைகளின் வாளகத்தில் இரு சக்கர மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருத்த போது அவர் செல்ல வேண்டிய பாதை வழியாக சுமார் 100 மீட்டர் தூரத்தில் சிறுத்தை புலி அவரை நோக்கி வந்து கொண்டு இருந்தது.
சுதாகரித்து கொண்ட ஊழியர் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்து அலுவலகத்தில் சேர்ந்து புலியிடம் இருந்து தப்பினார். இதனால் காற்றாலை ஊழியர்கள் மட்டுமல்ல அக்கம் பக்கத்து கிராம மக்களும் சிறுத்தை நடமாட்டத்தால் பீதி அடைந்து உள்ளனர்.
ஆரல்வாய்மொழியில் வன சரக அலுவலகம் இருந்தும் கூட வனத்துறையினர் இதனை கண்டு கொள்ளவில்லை. பொது மக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். Conclusion:எனவே வன விலங்குகள் காடுகளில் இருந்து வெளியேறி ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.