ETV Bharat / state

குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற முதியவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு! - கன்னியாகுமரியில் முதியவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கன்னியாகுமரி: ஆரல்வாய்மொழி அருகே குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற முதியவர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற முதியவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

author img

By

Published : Dec 3, 2020, 2:38 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தோப்பூர் சுடலைமாடன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாராயண பெருமாள் (71). இவர்அப்பகுதியிலுள்ள குளத்தில் வலை போட்டு மீன் பிடிப்பதற்காகச் சென்றுள்ளார்.

மீன் பிடிக்கச் சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரின் உறவினர்கள் குளத்திற்குச் சென்று பார்த்துள்ளனர். அங்கு அவரது உடைமைகள் மட்டும் இருந்துள்ளது, அவரை காணவில்லை.

இது குறித்து, அவர்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், நாராயண பெருமாள் குளத்தில் மூழ்கிருக்க வாய்ப்புள்ளதாக எண்ணி சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்களை வரவழைத்தனர்.

பின்னர், தீயணைப்பு வீரர்கள், இளைஞர்கள் ஆகியோர் இணைந்து குளத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வெகு நேரமாக தேடியும் அவர் குளத்தில் கிடைக்கவில்லை. குளத்தில் தண்ணீர் அதிக அளவில் இருப்பதாலும், இரவு என்பதாலும் தேடுதல் நிறுத்தப்பட்டது.

மீண்டும் இன்று (டிச.03) காலை சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தேடும் வேட்டையை ஆரம்பித்தனர். அப்போது, அவரது உடல் ஆழமான இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, அவரது உடலை மீட்ட காவல் துறையினர், உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆரல்வாய்மொழி காவல் துறையினர், நாராயண பெருமாள் தவறுதலாக குளத்தில் விழுந்தாரா அல்லது யாரேனும் குளத்தில் வீசினரா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: குளத்தில் தாமரை பூ பறிக்க முயன்ற சகோதரர்கள் நீரில் மூழ்கி பலி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.