நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூலம் லோன் வழங்க ரூ. 2.50 லட்சம் (இரண்டரை லட்சம்) பங்கு தொகை செலுத்த வேண்டும் என்றும், லோன் தொகை தரும்போது தற்போது செலுத்தும் இந்த தொகையையும் திரும்பி தங்களுக்கே தந்த விடுவோம் என்றும் அதற்கு ஆவணமாக ஆதார் அட்டை, வங்கி பாஸ் புத்தகம், பான் கார்டு ஆகியவற்றை மேரி ரமணி பெற்றுக் கொண்டுள்ளார்.
இவரது பேச்சை நம்பி குடும்ப பெண்கள் பலரும் இவரிடம் பணம் கொடுத்துள்ளனர். லோன் பணத்தை ஒவ்வொருவரும் பெற முதலில் தலா ரூ. 3 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறி பணத்தை வாங்கிக்கொண்டு, பணம் செலுத்திய 3வது நாள் உங்களுக்கு 1 லட்சம் லோன் கிடைக்கும் என்று கூறி நம்பவைத்துள்ளார். அதன் பிறகு பணம் கொடுத்த நபர்களிடம் சென்று உங்களுக்கு தர கொண்டு வரப்பட்ட பணம் விஜிலென்ஸ் காவல்துறையினர் மற்றும் புதுக்கடை காவல்நிலைய ஆய்வாளர், உள்ளிட்ட காவல்துறையினர் பிடித்து வைத்துள்ளனர்.
அவர்களுக்கு உடனடியாக சிறிது பணம் கொடுத்தால் பிடித்து வைத்திருக்கும் பணத்தை திரும்ப கொடுத்துவிடுவார்கள். அதுகிடைத்த உடன் உங்களுக்கு தர வேண்டிய பணத்துடன், இந்த பணத்தையும் சேர்த்து தந்து விடுவதாகவும் கூறி பல லட்சம் ருபாயை வாங்கி சென்றதாகவும் கூறப்படுகிறது.
ஒரு சிலர் பணத்தை கொடுக்காவிட்டால் காவல் நிலையங்களில் புகார் கொடுப்போம் என்று கூறினால், அவர்களை கொலை செய்து விடுவதாக வும் மிரட்டியுள்ளார். அவரது மிரட்டலுக்கு ஆளாகாதவர்களுக்கு, போலியான செக்குகளை கொடுத்து ஏமாற்றுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இவர் ஏமாற்றியதில் அதிகமானோர் அவர் சார்ந்திருக்கும் அமமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகளின் குடும்பத்தினரே அதிகமாக உள்ளனர்.
முதலில் ஒரு பெண்மணியிடம் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டு, அவர் மூலமாக மற்ற பெண்களை ஏமாற்றுவதை மேரி ரமணி வழக்கமாக கடைபிடித்து வந்தார். இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக பலரிடம் இதுபோன்று ஏமாற்றி பணமோசடி செய்த விவரம், பாதிக்கபட்டவர்களுக்கு தெரியவர அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பண மோசடியில் ஈடுபட்டு வரும் அமமுக பெண் நிர்வாகி மேரி ரமணியை கைது செய்யவும், பறிகொடுத்த பணத்தை மீட்டுத்தரவும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.