ETV Bharat / state

ஆட்சியில் இருந்து ஒரு பலனும் இல்லை-அமமுக மாவட்ட செயலாளர் - அமமுக மாவட்ட செயலாளர்

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் நிறுவிய ஜெயலலிதாவின் உருவச்சிலையைகூட காப்பாற்ற முடியாதவர்கள்தான் அதிமுகவினர் என அமமுக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

Jayalalitha statue issue
Jayalalitha statue issue
author img

By

Published : Mar 20, 2020, 9:27 AM IST

கன்னியாகுமரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒன்றிய அலுவலக திறப்பு விழா தோவாளை ஒன்றியத்திற்கு உட்பட்ட இறச்சகுளம் பகுதியில் நடைபெற்றது. ஒன்றிய அலுவலகத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் செந்தில் முருகன் திறந்து வைத்தார்.

பின்பு பேசிய அவர், ”குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் முழு உருவ சிலையை அதிமுகவினர் நிறுவினர். ஆனால் அதனை அனுமதியின்றி நிறுவியதாக கூறி மாநகராட்சியின் அகற்றிவிட்டனர்.

அதிமுகவினர் ஆட்சியில் இருந்து ஒரு பலனும் இல்லை-அமமுக மாவட்ட செயலாளர்
ஆளுங்கட்சியாக இருந்தும், ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் ஜெயலலிதாவின் சிலையைகூட காப்பாற்ற முடியாத நிலையில்தான் அதிமுகவினர் உள்ளனர். எனவே அவர்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை” என்றார்.

இதையும் படிங்க: துப்புரவுப் பணியாளர்கள் இனி ’தூய்மைப்பணியாளர்கள்’ - பழனிசாமி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.