ETV Bharat / state

கன்னியாகுமரியில் அம்மா மினி கிளினிக் திறப்பு - தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம்

கன்னியாகுமரி: ராஜாக்கமங்கலம் துறை ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட இலந்தையடிதட்டு பகுதியில் அம்மா மினி கிளினிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் திறந்து வைத்தார்.

thalavai sundaram
thalavai sundaram
author img

By

Published : Dec 28, 2020, 10:19 PM IST

தமிழ்நாட்டில் அனைத்து கிராமப்புற மற்றும் நகரங்களில் மாநிலம் முழுவதும் 2ஆயிரம் அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி கடந்த 14ஆம் தேதி சென்னையில் முதல் அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் இன்று(டிச.28) ராஜாக்கமங்கலம் துறை ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட தர்மபுரம் ஊராட்சி இலந்தையடிதட்டு பகுதியில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், "அம்மா மினி கிளினிக் தொடங்க தேவையான வசதிகள் இருந்தால் அந்த இடத்தை அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு உறுதி செய்த பின்னர் தான் மினி கிளினிக் அமைக்க முடியும். கடந்த 19ஆம் தேதி காட்டுப்புதூர் ஊராட்சியில் அம்மா மினி கிளினிக் திறந்து வைக்கப்பட்டது.

கன்னியாகுமரியில் அம்மா மினி கிளினிக் திறப்பு

இன்று (டிச.28) முதல் தர்மபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட இலந்தையடிதட்டு, காற்றாடிதட்டு, கீரிவிளை, கேசவன்புதூர், செம்பொன்கரை காலனி, திக்கிலான்விளை நங்கூரான் பிலாவிளை ஆகிய ஏழு கிராமங்கள் சேர்ந்த 963 குடும்பங்களில் உள்ள 3ஆயிரத்து 603 பேர் இதன் மூலம் பயனடைவார்கள்" என்றார்.

இதையும் படிங்க: சபரிமலை கோயில் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.