கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புத்தன்துறை, கேசவன் புத்தன்துறை உள்ளிட்ட பல்வேறு கடல் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால் கடல் அரிப்பு ஏற்பட்டு கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.
இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். வங்கக் கடலில் உருவாகி உள்ள ஆம்பன் புயலின் காரணமாக இந்த கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.
கடல் சீற்றம், கடல் அரிப்புகளில் இருந்த மீனவ கிராமத்தை காப்பாற்ற தூண்டில் வளைவுகள் அமைத்து தர வேண்டும் எனவும் அரசு போர்கால அடிப்படையில் உதவிகள் செய்ய வேண்டும் என்றும் மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு