கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி பேரூராட்சிக்குட்பட்ட மயிலாடி கூட்டுறவு வங்கியில் பேரூராட்சித் தலைவர் முறைகேடாக பணம் எடுத்ததாக தெரிகிறது. இதற்கு கூட்டுறவு வங்கி அலுவலர்களும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதனைக் கண்டித்து அனைத்து கட்சி சார்பில் கூட்டுறவு வங்கி முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேமுதிக உறுப்பினர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டதின் போது வங்கி அலுவலர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பப்பட்டது.
மேலும் முறைகேடான வகையில் எடுக்கப்பட்ட பணத்தை உடனடியாக கூட்டுறவு வங்கியில் திருப்பி ஒப்படைப்பதுடன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.