அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய அரசின் தேச விரோத மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள், விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் இணைந்து நாடு தழுவிய அளவில் இன்று (ஆகஸ்ட் 10) போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:
நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவச சுகாதார பாதுகாப்பை உத்தரவாதம் செய்திட வேண்டும். ஒவ்வொரு நபருக்கும் ஒரு மாதத்திற்கு பத்து கிலோ உணவு தானியங்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். வருமான வரி வரம்புக்குள் வராத அனைத்து குடும்பங்களுக்கும் மாதத்திற்கு 7,500 ரூபாய் வீதம் அடுத்த ஆறு மாதங்களுக்கு வழங்க வேண்டும். விவசாய கடன்கள், விவசாயகடன் தவணைகளை அனைத்தையும் ஒத்திவைக்க வேண்டும். என இவ்வாறு தெரிவித்தனர்.