கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலையடுத்த மயிலாடி பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி, இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மயிலாடி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணியை அஞ்சு கிராமம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிச்சை, கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இந்தப் பேரணியில் மயிலாடி பேரூராட்சி செயல் அலுவலர் அகத்தியலிங்கம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பேரணியாக சென்று போதை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த பேரணியின்போது போதையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனால் ஏற்படும் நோய்கள் குறித்தும் விளக்கம் அடங்கிய நோட்டீஸ்களை பொதுமக்களுக்கு மாணவ-மாணவிகள் வழங்கினர்.
இதையும் படிங்க: விளையாட்டு விபரீதமானதால் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு!