ETV Bharat / state

மார்த்தாண்டத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - வர்த்தகர்கள் எதிர்ப்பு! - ஆக்கிரமிப்புகள்

கன்னியாகுமரி: மார்த்தாண்டம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை, வர்த்தகர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்
author img

By

Published : Jul 18, 2019, 10:47 AM IST

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குலசேகரம் சந்திப்பு பகுதியில் வணிக நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதிகளவில் இருப்பதால், மார்த்தாண்டம் - பேச்சிப்பாறை சாலையில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்கு, கல்லடி மாமூடு முதல் குலசேகரம் கான்வென்ட் சந்திப்பு வரையில், சாலையின் இரு புறங்களிலும் வர்த்தகர்கள் ஆக்கிரமித்திருப்பதே காரணமெனவும் இதனால் போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் ஏற்படுவதாகக்கூறிய பொதுமக்கள், இதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற பேரூராட்சி அதிகாரிகளிடம், வர்த்தகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் குலசேகரம் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின், வர்த்தகர்களின் எதிர்ப்பையும் மீறி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். நகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Intro:தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படும் குலசேகரம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பேரூராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தபோது வர்த்தகர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எதிர்ப்பையும் மீறி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.Body:tn_knk_04_aggressive_disposal_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படும் குலசேகரம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பேரூராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தபோது வர்த்தகர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எதிர்ப்பையும் மீறி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குலசேகரம் பேரூராட்சியில் குலசேகரம் பகுதியானது மருத்துவ கல்லூரிகள் பல்வேறு அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகள் மற்றும் அதிகமான வணிக நிறுவனங்களும் உள்ள பகுதியாகும். இந்த பகுதியில் தினசரி மார்த்தாண்டம் பேச்சிப்பாறை சாலையில் குலசேகரம் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பள்ளி கல்லூரி மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருப்பது கல்லடிமாமூடு முதல் குலசேகரம் கான்வென்ட் சந்திப்பு வரை சாலையின் இரு புறங்களிலும் வர்த்தகர்கள் ஆக்கிரமித்து வைத்திருப்பதால் தான் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்புகள் ஏற்படுவதாகவும் கூறி பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை எழுப்பியதன் பேரில் இன்று ஆக்கிரமிப்புகளை அகற்றவந்த அதிகாரிகளிடம் வர்த்தகர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதர்க்கு எதிர்ப்பு தெருவித்தனர். இதனால் சற்றுநேரம் குலசேகரம் பகுதியில் பரபரப்பு ஏர்ப்பட்டது. அதிகாரிகள் எதிர்ப்பையும் மீறி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது குலசேகரம் பகுதியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் பேரூராட்சி நிர்வாகம் அகற்றவேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பியுள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.