சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு வெளிநாடு மற்றும் உள்நாட்டிலிருந்து தினமும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் ரயில்நிலையம் அருகில் பேவாட்ச் மாயாபுரி மெழுகு அருங்காட்சியகம் உள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் உலகின் பிரபலங்களான அப்துல்கலாம், மைக்கேல் ஜாக்சன், பாரக் ஓபாமா, சார்லி சாப்ளின், பாடகி எம்எஸ் சுப்புலெட்சுமி, ரபீந்திரநாத் தாகூர், விஞ்ஞானி ராபர்ட் ஐன்ஸ்டீன், டேவிட் பெக்கம், உம்மன் சாண்டி, மதர் தெரசா, மன்மோகன்சிங் உள்ளிட்டோரின் மெழுகு சிலைகள் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் நடிகர் விஜய்யின் மெழுகு சிலை புதிதாக வைக்கப்பட்டுள்ளது. இதனை குமரி, நெல்லை மாவட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் திறந்து வைத்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, உலகத்தின் முக்கிய தலைவர்கள் வைக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகத்தில் எங்கள் தளபதி விஜய் சிலையையும் வைத்திருப்பது எங்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு இந்த சிலை மிகவும் பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனை இங்கு நிறுவிய அருங்காட்சியக நிர்வாகத்திற்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர்.
இதையும் படிங்க: அயோத்தியில் பட்டியலினத்தவருக்கு சிலை வேண்டும் - கோவா ஆளுநர்