நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் இன்று தமிழ்நாடு முழுவதும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தவகையில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜர் சிலை அருகில் சிவாஜியின் புகைப்படம் வைத்து அதற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதேபோல் அப்பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஏராளமான காங்கிரஸ்காரர்கள் கலந்துகொண்டனர்.
குமரியில் சிவாஜி கணேசனின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை! - நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள்
கன்னியாகுமரி: குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாளை முன்னிட்டு ஏராளமானவர்கள் சிவாஜியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.