தேசிய விடுமுறை தினமான அக்டோபர் 2ஆம் தேதியன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்குவது கட்டாயம். அவ்வாறு விடுமுறை வழங்காவிட்டால் இரட்டிப்பு சம்பளம் அல்லது ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்.
எனவே, இதுகுறித்து நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் ஞான சம்பந்தன் தலைமையில் மார்த்தாண்டம், திங்கள்சந்தை ,தக்கலை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, விதிமுறைகளை மீறி செயல்பட்ட 25 கடைகள் மற்றும் நிறுவனங்கள், மற்றும் 9 உணவகங்கள் மீது தொழிலாளர் நலத்துறையின் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்தனர்.