ETV Bharat / state

‘மணலால் மூடியுள்ள கிராமத்தை மீட்க நடவடிக்கை தேவை’ - காங்கிரஸ் எம்.பி கோரிக்கை

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே கடல் கொந்தளிப்பு காரணமாக மணலால் மூடப்பட்ட அழிகால் மீனவ கிராமத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் கோரிக்கை வைத்துள்ளார்.

மணலால் மூடியுள்ள கிராமத்தை ஆய்வு செய்யும் எம்.பி வசந்தகுமார்
author img

By

Published : Aug 26, 2019, 8:31 AM IST

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ளது அழிகால் மீனவ கிராமம். இந்த கிராமத்தில் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக கிராமத்திற்குள் கடல் நீர் புகுந்து, வீடுகள் அனைத்தும் மணல் குவியலால் மூடப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் முகாம்களில் தங்கியுள்ளனர்.

மணலால் மூடியுள்ள கிராமத்தை ஆய்வு செய்யும் எம்.பி வசந்தகுமார்

இந்நிலையில், இதையறிந்த எம்.பி வசந்தகுமார் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுப்பதாக உறுதியளித்தார். பின்னர் இது குறித்து அவர் கூறுகையில், ‘அழிகால் கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டு இன்னும் பொதுமக்கள் வீடுகளுக்கு திரும்பாமல் உள்ளனர். இந்நிலையில், அரசு கொடுத்த வாக்குறுதியின்படி தூண்டில் வளைவை அமைக்கவில்லை. அதேபோல் கடல் சீற்றம் ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும் சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிடவில்லை. எனவே அவர் உடனடியாக அழிகால் கிராமத்தைப் பார்வையிட்டு உரிய மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

Intro:நாகர்கோவில் அருகே கடல் கொந்தளிப்பு காரணமாக மணலால் மூடப்பட்ட அழிகால் மீனவ கிராமத்தை ஒரு வாரமாகியும் மாவட்ட கலெக்டர் இதுவரை பார்க்கவில்லை. உடனடியாக பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிப்பை பார்வையிட்ட பின் கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் பேட்டி Body:tn_knk_03_searough_vasanthakumar_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

நாகர்கோவில் அருகே கடல் கொந்தளிப்பு காரணமாக மணலால் மூடப்பட்ட அழிகால் மீனவ கிராமத்தை ஒரு வாரமாகியும் மாவட்ட கலெக்டர் இதுவரை பார்க்கவில்லை. உடனடியாக பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிப்பை பார்வையிட்ட பின் கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் பேட்டி
நாகர்கோவில் அருகே அழிகால் மீனவ கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடல் கொந்தளிப்பு காரணமாக தண்ணீர் புகுந்து அந்த கிராமமே மணலால் மூழ்கியது. இதனை இன்று கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமார் பார்வையிட்டு தேவையான உதவிகளை செய்வதாக கூறிய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் " அழிகால் கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டு இன்னும் பொதுமக்கள் வீடுகளுக்கு திரும்பாமல் உள்ளனர். ஆனால் அரசு வாக்களித்தபடி தூண்டில் வளைவை அமைக்க வில்லை. ஒரு வாரத்திற்கு மேலாகியும் சம்ப இடத்தை மாவட்ட கலெக்டர் பார்வையிடவில்லை. எனவே அவர் உடனடியாக அழிகால் கிராமத்தை பார்வையிட்டு உரிய மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.