ETV Bharat / state

ஆசியாவின் முதல் பெண் அரசுப் பேருந்து ஓட்டுநர் வசந்தகுமாரியின் ‘நச்’ அட்வைஸ்! - வசந்தகுமாரி

பெண்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் தங்களை தேவையில்லாமல் விளம்பரபடுத்திக் கொள்ளக் கூடாது, அது நமது வளர்ச்சியை பாதிக்கும் என ஆசியாவின் முதல் பெண் அரசு பேருந்து ஓட்டுநரான வசந்தகுமாரி தெரிவித்துள்ளார்.

ஆசியாவின் முதல் பெண் அரசு பேருந்து ஓட்டுநர் வசந்தகுமாரி

author img

By

Published : Jun 27, 2023, 8:41 AM IST

ஆசியாவின் முதல் பெண் அரசு பேருந்து ஓட்டுநர் வசந்தகுமாரி

கன்னியாகுமரி: குளச்சல் அருகே உள்ள ரித்தாபுரத்தைச் சேர்ந்தவர் வசந்தகுமாரி. இவர் தனது சிறு வயதிலேயே கார் ஓட்ட கற்றுக் கொண்டுள்ளார். பின்னர் தனது அண்ணன் மூலம் பெரிய வாகனங்களையும் இயக்குவதற்கு கற்றுக் கொண்டார். அந்த காலகட்டத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று அரசு அறிவித்ததை அடுத்து, வசந்தகுமாரியின் நண்பர்களும், உறவினர்களும் ‘நன்றாக கார் ஓட்டுகிறாய், பஸ் ஓட்டுகிறாய். ஆகவே, நீ அரசு வேலைக்கு முயற்சி செய்தால் என்ன?’ என்று ஊக்க விதையை தூவி உள்ளனர்.

அதன் காரணமாக, அவரும் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலையில் சேர தேர்வுக்குச் சென்று உள்ளார். அந்த தேர்வில் அவரை ஒரு பெண் எப்படி பேருந்து ஓட்ட முடியும் என்றும், பெண்களால் இது முடியாது என்று வசந்தகுமாரியை நிராகரித்துள்ளனர். சிறிது காலத்திற்குப் பின்னர் நாகர்கோவிலில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகத்தில், அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அரசு பேருந்து ஓட்டுவதற்கான வாய்ப்பை வசந்தகுமாரிக்கு வழங்கி உள்ளார்.

இதனையடுத்து மார்ச் 30, 1993ஆம் ஆண்டு முதல் பெண் ஓட்டுநராக வந்த வசந்தகுமாரி, ஏப்ரல் 30 2017ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார். கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் அரசுப் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். 64 வயதான வசந்தகுமாரி, நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு விரைவு பேருந்துகள் வரையும் இயக்கியுள்ளார்.

இவருடைய 24 வருட பணி காலத்தில் எந்த விதமான சிறு விபத்தும் இல்லாமல் பணியை நிறைவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஆசியாவிலேயே முதல் அரசு பேருந்து பெண் ஓட்டுநர் என்பது குறிப்பிடத்தக்கது. தனி மனித சாதனையாக ஆசியாவின் முதல் பெண் அரசு பேருந்து ஓட்டுநர், 24 ஆண்டு கால ஓட்டுநராக பணிபுரிந்த காலத்தில் எந்த விதமான சிறு விபத்தும் ஏற்படுத்தாமல் பணியாற்றிய காரணத்துக்காக சிறந்த ஆசிய சாதனைகள் புத்தகம் விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கோயம்புத்தூரைச் சேர்ந்த ஷர்மிளா என்ற தனியார் பேருந்து ஓட்டுநர் குறித்து பேசிய வசந்தகுமாரி, “பெண்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால், தேவையில்லாமல் விளம்பரப்படுத்திக் கொள்ளக் கூடாது. அது நமது வளர்ச்சியை பாதிக்கும்.

இது போன்ற விஐபிக்கள் வந்து நம்மைப் பாராட்டி செல்லும்போது நமக்கு தலைக்கனம் உருவாகும். எனவே, இது ஒரு அனுபவக் குறைவால் ஏற்படக் கூடியது. நடிப்பு முக்கியமல்ல, வாழ்க்கைதான் முக்கியம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: Bus Driver Sharmila: கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா டிஸ்மிஸ்.. பஸ் உரிமையாளர் விளக்கம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.