கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே சுவாமிநாதபுரம் புனித ஜோசப் கலாசன்ஸ் என்ற தனியார் பள்ளிக்கு சொந்தமான பள்ளி வாகனம், மாணவ மாணவிகளை அவரவர் வீடுகளில் விட்டுவிட்டு பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது, கட்டுபாட்டை இழந்த பள்ளி வாகனம் எதிரே வந்த சுற்றுலா வேன் மீது மோதியது.
இதில் மகாராஷ்டராவில் இருந்து கன்னியாகுமரி வந்த சுற்றுலா பயணிகள் 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிர்ஷ்டவசமாக பள்ளி வேனில் மாணவ மாணவிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: வால்பாறை அருகே சலையில் காட்டு யானைகள் நடமாட்டம்...வாகன ஓட்டிகள் அச்சம்