கன்னியாகுமரி: குளச்சல் அருகே ரீத்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வர்க்கீஸ் (44). இவரது மகள் ஆஷா மற்றும் அவரது மகள் ரிஷா (4) ஆகியோருடன் குளச்சலிலிருந்து அழகியண்டபடம் நோக்கி மாருதி மினிவேன் சென்று கொண்டிருந்தார். அப்போது இரணியல் ரயில் நிலையம் அருகே நெய்யூர் பகுதியில் சாலையில் இடதுபுறமாக வாகனத்தை திருப்பினார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுபாட்டை இழந்து வாகனம் 20அடி ஆழமுள்ள ரயில் தண்டவாளத்தில் விழுந்து முற்றிலும் சேதமடைந்தது. விபத்து குறித்து அக்கம்பக்கத்தினர் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து, நாகர்கோவிலிருந்து திருவனந்தபுரம் மார்கமாக செல்லும் ரயில்கள் நிருத்தபட்டது.
மேலும் இந்த விபத்தில் வர்க்கீஸ், ஆஷா, ரிஷா ஆகியோர் லேசான காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். பின்னர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். நாகர்கோவில்- திருவனந்தபுரம் செல்லும் ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விபத்தால் ரயில் போக்குவரத்து சில மணிநேரம் பாதிக்கபட்டது.
அதைதொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புமீட்பு படையினர் அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் ரயில் தண்டவாளத்திலிருந்து வாகனத்தை அப்புறப்படுத்தி, ரயில் போக்குவரத்து சீரானது இந்த விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு துணை கண்காணிப்பாளர் சந்தீப்குமார் தலைமையில் ரயில்வே பாதுகாப்புபடையினர் தண்டவாளத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.