கன்னியாகுமரி மாவட்டம் கீழமணக்குடியைச் சேர்ந்தவர் ஜோசப். மீனவரான இவர், சின்னமுட்டம் புனித தோமையர் சங்கத்தைச் சேர்ந்த ஜெபஸ்டின் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், இன்று காலையில் 11 பேருடன் ஜோசப் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். சுமார் 19 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர் திடீரென கை, கால் வலிப்பு ஏற்பட்டு சுயநினைவின்றி மயங்கி விழுந்தார்.
இதைக்கண்ட சக மீனவர்கள் உடனே அவரை மீட்டு சின்னமுட்டம் மீன் பிடித்துறைமுகத்திற்கு கொண்டு சென்று ஆம்புலன்ஸில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
நீண்ட நாட்களாக கடல் சீற்றத்தால் மீன் பிடிக்க செல்லாமல் இருந்துவந்த நிலையில், மீன்பிடிக்க ஆரம்பித்த சில தினங்களில் இப்படி ஒரு சம்பவம் ஏற்பட்டது மீனவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.