ETV Bharat / state

கையில் தட்டு ஏந்தி பிச்சை கேட்டு நூதன முறையில் போராட்டம்

author img

By

Published : Aug 9, 2022, 9:16 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறையில் அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் அரசு ரப்பர் கழக தொழிற்கூடம் முன்பு கையில் தட்டு ஏந்தி பிச்சை கேட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கையில் தட்டு ஏந்தி பிச்சை கேட்டு நூதன முறையில் போராட்டம்
கையில் தட்டு ஏந்தி பிச்சை கேட்டு நூதன முறையில் போராட்டம்

கன்னியாகுமரி: கீரிப்பாறையில் அரசு ரப்பர் தொழில் கூடம் உள்ளது. இதில் கீரிப்பாறை, காளிகேசம், பரளியாறு, மணலோடை ஆகிய நான்கு கோட்டங்களிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பால் வடிப்பு மற்றும் தொழிற்கூடத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இவர்களுக்கு கடந்த ஆறு வருடங்களாக ஊதிய உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. தமிழக அரசுடன் 70 கட்டங்களாகாக ரப்பர் தோட்ட தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் கண்டு கொள்ளாத அரசை கண்டித்து கீரிப்பாறையில் அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் அரசு ரப்பர் கழக தொழிற்கூடம் முன்பு கையில் தட்டு ஏந்தி பிச்சை கேட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு ஐ.என்.டி.சி.யூ சார்பில் திரளான ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் கையில் தட்டு ஏந்தி அரசு ரப்பர் தொழிற்கூட அலுவலர்களிடம் பிச்சை கேட்டு நூதனமுறைகளில் போராட்டம் நடத்தினார்கள். பின்னர் கீரிப்பாறை கோட்ட மேலாளர் அலுவலகத்திலும் உள்ள அலுவலர்களிடம் பிச்சை கேட்டு போராட்டம் நடத்தினார்கள்.

தொடர்ந்து அங்கிருந்து நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குனர் அலுவலகத்திலும் பிச்சை கேட்டு போராட்டத்தை நிறைவு செய்தனர். வரும் 17 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் செய்ய தொழில் சங்கங்கள் முடிவு செய்து உள்ளனர்.

இதையும் படிங்க: வ.உ.சி சுவரோவியத்தின்மீது கருணாநிதியின் படம் வைத்ததால் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.