கன்னியாகுமரி: பூதப்பாண்டி அருகே அந்தரபுரத்தைச்சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மகள் சுபிதா கிரேஸ்(21). இவர் திடல் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார்.
இந்நிலையில், சமீப நாட்களாக கல்லூரிக்குச்செல்லாமல் வீட்டிலேயே முடங்கியிருந்த கிரேஸ், நேற்று(செப்.17) திடீரென வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
விசாரணையில், கல்விக்கட்டணம் செலுத்தவில்லை எனக்கூறி கல்லூரியில் பேராசிரியர்கள் திட்டியதாகவும், இதனால் மனம் உடைந்து கல்லூரிக்குப்போகாமல் வீட்டில் முடங்கி இருந்த மாணவி சுபிதா கிரேஸ் வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
அவரது உடலை உடற்கூராய்வுக்காக போலீசார், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு