ETV Bharat / state

முதலுதவி அளிக்காமல் அலட்சியமாக இருந்த பள்ளி நிர்வாகம்: மாணவி பலி!

கன்னியாகுமரி: இரணியல் அருகே தனியார் பள்ளி தேர்வு அறையில் மயங்கி விழுந்த 6ம் வகுப்பு மாணவிக்கு முதலுதவி அளிக்காமல் காலம் தாழ்த்தியதால், அம்மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Apr 8, 2019, 7:12 PM IST

முதலுதவி அளிக்காமல் அலட்சியமாக இருந்த பள்ளி நிர்வாகம்: பள்ளி மாணவி பலி!

கன்னியாகுமரி மாவட்டம், பரசேரி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் 45, ஜலனா 38, தம்பதியரின் 11 வயது மகள் காவியா. இவர், மைலோடி பகுதியில் இயங்கி வரும் விக்டரி மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 4-ம் தேதி பள்ளியில் தேர்வு எழுதிய போது, மாணவி காவ்யா வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகம் மாணவியின் தாயார் ஜலஜாவுக்கு தகவல் கொடுத்தனர். அவர் பள்ளிக்கு வரும் வரை, உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவி காவ்யாவுக்கு, பள்ளி நிர்வாகம் எந்த வித முதலுதவியும் கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. சுமார் 45 நிமிடத்துக்கு பின் பள்ளிக்கு வந்த ஜலஜா, மயக்க நிலையில் இருந்த தனது மகளை நெய்யூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள், மாணவிக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு, கால தாமதத்தால் மூளை நரம்பு பாதிப்படைந்து ரத்த கசிவு ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.

மேலும் கால தாமதமாக வந்ததால் காப்பாற்றுவது கடினம் என்று கூறியதும், திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தனது மகளை ஜலஜா கொண்டு சென்றார். அங்கு அவருக்கு கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி காவ்யா உயிரிழந்தார்.

இந்நிலையில் காவ்யாவின் பெற்றோர், தனது மகள் மயக்கமடைந்த நிலையில் பள்ளி நிர்வாகம் முதலுதவி அளிக்காமல் காலம் தாழ்த்தியதோடு, மனிதாபிமானமற்ற நிலையில்தான் பள்ளி செல்லும் வரை ஒரு அறையில் மகளை படுக்க வைத்துள்ளனர். மயங்கிய உடனே பள்ளி நிர்வாகம் சிகிச்சை அளித்து இருந்தால், எனது மகள் உயிர் பிழைத்து இருக்க வாய்ப்புள்ளது.

ஆனால், அவ்வாறு இல்லாமல் அலட்சியமாக செயல்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்குமாறு, இரணியல் காவல்நிலையத்தில் காவ்யாவின் தந்தை முருகன் புகார் அளித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே பள்ளியில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதற்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி:  குமரி மாவட்டம் இரணியல் அருகே தனியார் பள்ளி தேர்வு அறையில் மயங்கி விழுந்த 6ம் வகுப்பு மாணவிக்கு முதலுதவி அளிக்காமல் காலம் தாழ்த்தியதால், அம்மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டம், பரசேரி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் 45, ஜலனா 38,  தம்பதியரின் 11 வயது மகள் காவியா. இவர், மைலோடி பகுதியில் இயங்கி வரும் விக்டரி மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 4ம் தேதி, காலை 8 மணிக்கு பரசேரி பகுதியில் இருந்து பள்ளி வாகனத்தில் பள்ளி சென்றார். அங்கு தேர்வு எழுதியபோது, பகல் 12 மணியளவில் மாணவி காவ்யாவுக்கு வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

இது குறித்து பள்ளி நிர்வாகம் மாணவியின் தாயார் ஜலஜாவுக்கு தகவல் கொடுத்தனர். அவர் பள்ளிக்கு வரும் வரை, உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவி காவ்யாவுக்கு, பள்ளி நிர்வாகம் எந்த வித முதலுதவியும் கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

சுமார் 45 நிமிடத்துக்கு பின் பள்ளிக்கு வந்த ஜலஜா, மயக்க நிலையில் இருந்த தனது மகளை நெய்யூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள், மாணவிக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு, கால தாமதத்தால் மூளை நரம்பு பாதிப்படைந்து ரத்த கசிவு ஏற்பட்டதாக கூறியுள்ளனர். மேலும் கால தாமதமாக வந்ததால் காப்பாற்றுவது கடினம் என்று கூறியதும், திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தனது மகளை ஜலஜா கொண்டு சென்றார். அங்கு அவருக்கு கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிட்சை பலனின்றி காவ்யா உயிரிழந்தார். 

இந்நிலையில் காவ்யாவின் பெற்றோர், தனது மகள் மயக்கமடைந்த நிலையில் பள்ளி நிர்வாகம் முதலுதவி அளிக்காமல் காலம் தாழ்த்தியதோடு, மனிதாபிமானம் அற்ற நிலையில் தான் பள்ளி செல்லும் வரை ஒரு அறையில் மகளை படுக்க வைத்துள்ளனர். மயங்கிய உடனே பள்ளி நிர்வாகம் சிகிச்சை அளித்து இருந்தால், எனது மகள் உயிர் பிழைத்து இருக்க வாய்ப்புள்ளது.

ஆனால், அவ்வாறு இல்லாமல் அலட்சியமாக செயல்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்குமாறு, இரணியல் போலீசில் காவ்யாவின் தந்தை முருகன் புகார் அளித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே பள்ளியில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பள்ளி நிர்வாகம் அலட்சியமாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது. 

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.