ETV Bharat / state

கன்னியாகுமரி, தமிழ்நாட்டுடன் இணைந்து 65 ஆண்டுகள்!

author img

By

Published : Nov 2, 2020, 11:20 AM IST

கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாட்டுடன் இணைந்து இன்றுடன் (நவ.2) 65 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, அதற்காக பாடுபட்ட மார்ஷல் நேசமணியின் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

nesamani_anjali
nesamani_anjali

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், ஆரம்பத்தில் கொச்சி சமஸ்தானத்துடன் இணைந்திருந்தது. அப்போது தமிழ் பேசும் மக்களின் கல்வி போன்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன. இதனால் கடந்த, 1948ஆம் ஆண்டு கேரளாவோடு இருந்த கன்னியாகுமரியை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும், தமிழ் மொழி பேசும் மக்கள் வாழும் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என மார்ஷல் நேசமணி தலைமையில் போராட்டம் வெடித்தது.

போரட்டத்தை அடக்க கேரள அரசு தடியடியும், துப்பாக்கிச் சூடும் நடத்தியது. மக்களின் தீவிர போராட்டத்தின் விளைவாக, கடந்த 1956ஆம் ஆண்டு கன்னியாகுமரி, தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது.

இதன் 65ஆம் ஆண்டு தினத்தை முன்னிட்டு, நாகர்கோவிலில் உள்ள மார்ஷல் நேசமணி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில், மாவட்ட ஆட்சியர் எம்.அரவிந்த் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.

மேலும், திமுக, அமமுக, பாமக, பனங்காட்டுபடை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க : வெங்காயத்தைப் போல பருப்பு எண்ணெய் விலைகளும் உயரும் - விக்கிரமராஜா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.