கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயில் மிகவும் பிரசித்திப்பெற்றது. இந்தக் கோயிலில் நவராத்திரி திருவிழா அக்.17ஆம் தேதி தொடங்கியது. அந்நாளிலிருந்து அம்மன் ஒவ்வொரு நாளும் புதுப்புது அலங்காரத்தில் பவனிக்கு எடுத்துச் செல்லப்படுவார். ஐந்தாவது நாளான நேற்று (அக்.21) அம்மன் காமதேனு வாகனத்தில் பவனிக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் இலங்கை நாட்டைச் சேர்ந்த பகவதி அம்மன் பக்தர்கள், நவராத்திரி விழாவின்போது இந்தக் கோயிலுக்கு வருகைத் தந்து பிரமாண்டமாக விழாவை நடத்துவர். ஊரடங்கு காரணமாக, அவர்கள் வருகை தராமல் பணம் மட்டும் அனுப்பி வைக்கப்பட்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.