இதுகுறித்து மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அருள்முருகன் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்கியிருக்கும் வழக்குகளை உடனடியாக முடிப்பதற்கு ஏதுவாக வரும் எட்டாம் தேதி மாவட்டத்தில் ஐந்து இடங்களில் 12 அமர்வுகளாக மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
இதில் செக் மோசடி, விபத்து இழப்பீடு, குடும்பத் தகராறுகள், சிவில் வழக்குகள் உட்பட மூன்று ஆயிரத்து 32 வழக்குகள் விசாரிக்கப்பட உள்ளன. சமரச நீதிமன்றம் என்பதால் இதற்கு மேல் முறையீடு கிடையாது. மேலும், உடனடி நிவாரணம் கிடைக்கும். வழக்குகளில் சமரசமாகத் தீர்வு காணப்பட்டால் நீதிமன்ற கட்டணம் திரும்பி வழங்கப்படும்" என்றார்.
இதையம் படிங்க : 'வறுமையில்லாத நாட்டை உருவாக்க இதுதான் வழி' - பொருளியல் பேராசிரியர் ரங்கா ரெட்டியின் கருத்து