கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்டின் ஜெயக்குமார். இவரது உறவினர் ஒருவர் மரணமடைந்ததால் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு குடும்பத்துடன் சென்றிருந்தார்.
இந்நிலையில், இன்று (அக்.23) பிற்பகல் குடும்பத்தினருடன் வீடு திரும்பியபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் படுக்கை அறையில் சென்று பார்த்த போது, பீரோவின் கதவு உடைக்கப்பட்டு அதிலிருந்த 30 சவரன் நகை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து தக்கலை காவல் நிலையத்தில் ஜஸ்டின் புகார் அளித்தார். அதன் பேரில் தடயவியல் நிபுணர்களும், மோப்ப நாய்யுடன் காவல்துறையினர் சோதனை செய்தனர். ஜஸ்டின் ஜெயக்குமார் குடும்பத்தினர் கடந்த ஒரு வாரமாக வீட்டில் இல்லாததை அறிந்துகொண்ட கொள்ளையர்கள், நேற்றிரவு (அக்.22) வீட்டின் பின்பக்கம் வழியாக நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தக்கலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.