கன்னியாகுமரி ; ஹைதராபாத்திலிருந்து தனியார் கூரியர் சர்வீஸ் மூலமாக நாகர்கோவிலில் உள்ள தனியார் கூரியர் சர்வீஸ் மையத்திற்கு பார்சலில் வந்த 1.300 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றியுள்ளனர். ராஜாக்கமங்கலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று (ஜூன்19) குமரி மாவட்ட எஸ்பி ஹரிகிஷன் பிரசாத், கூரியர் மூலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கஞ்சா விற்பனையை நூதன முறையில் தொடங்கி உள்ளது தெரியவந்துள்ளது.
முன்னதாக, அவர்கள் இன்ஸ்டாகிராம் மூலம் கஞ்சா ஆர்டர் செய்து போலீசாரிடம் சிக்காமல் இருக்க கூரியர் மூலம் அனுப்பியுள்ளது மாவட்ட எஸ்பி நடத்திய திடீர் ஆய்வில் கண்டறியபட்டுள்ளது. சமூக வலைதளங்களை பொழுதுபோக்கு அம்சங்களாகவும் கல்வி கற்க்கும் அம்சங்களாகவும் பயன்படுத்திய வந்ததைத் தாண்டி, தற்போது தடை செய்யப்பட்ட கஞ்சா போன்ற பொருட்களை வியாபாரம் செய்யும் தளமாகவும் பயன்படுத்தி வருவது அதிர்ச்சியை அளிக்கிறது.
இதனைத் தொடர்ந்து, இன்ஸ்டாகிராம் மூலம் ஆர்டர் செய்து கூரிய மூலம் விற்பனைக்கு வந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சம்பந்தப்பட்ட நாகர்கோவிலில் கூரியர் சர்வீஸ் மையங்களுக்கு வரும் பார்சல்களில் சரியான முகவரிகள் உள்ளதா, அதிலுள்ள கைபேசி எண்கள் பயன்பாட்டில் உள்ளனவா என்பதை சரி பார்க்கவேண்டும் என்று ஹரிகிஷன் பிரசாத் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், குறிப்பாக இது போன்ற குற்ற செயல்களை தடுக்க கூரியர் சர்வீஸ் மையங்கள் காவல்துறைக்கு உதவியாக இருக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். இதுவரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையாளர்கள் 235 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 150 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கொலை வழக்கு - டெல்லி திகார் சிறைக்கைதி நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்