ETV Bharat / state

பூட்டை உடைத்து 17 லட்சம் ரூபாய் கொள்ளை - Tamil latest news

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் காய்கள், கனிகள் மொத்த விற்பனை செய்யும் நிறுவனத்தின் பூட்டை உடைத்து 17 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.

17 லட்சம் கொள்ளை
author img

By

Published : Jun 2, 2020, 8:58 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரதான முக்கிய பகுதியில் காய், கனிகள் விற்பனை நிறுவனம் செயல்பட்டுவருகிறது. சிவக்குமார் என்பவரால் நடத்தபட்டு வரும் இந்த நிறுவனத்தில் வெளியூர்களிலிருந்து காய், கனிகள் கொண்டுவரப்பட்டு உள்ளூர் வியாபாரிகளுக்கு மொத்த விற்பனை செய்யபட்டு வருகின்றன.

இந்நிலையில் வழக்கம்போல் நேற்றிரவு நிறுவனத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். இன்று வந்து பார்க்கும் போது நிறுவனத்தின் ஷட்டர் பூட்டுகள் உடைக்கபட்டு கிடந்தது. கடையின் உள்ளே சென்று பார்த்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் கடைக்குள் நுழைந்து அலுவலகத்தில் இருந்த 17 லட்சம் பணத்தை கொள்ளையடிந்துச் சென்றது தெரியவந்தது.

17 லட்சம் கொள்ளை
17 லட்சம் கொள்ளை

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வடசேரி காவல் துறையினர் அலுவலகத்தில் தடயங்கள் சேகரித்து விசாரணை செய்து வருகின்றனர். நள்ளிரவில் பூட்டை உடைத்து 17 லட்சம் ரூபாய் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.