ETV Bharat / state

நகர சாலையின் நடுவே 120 அடி கிணறு..! - 120 FT WELL FOUND UNDER CITY ROAD

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக குழி தோண்டும் போது, சாலையில் 120 அடி ஆழ கிணறு கண்டறியப்பட்டது. இதை சிமெண்ட் அடுக்கை கொண்டு மூடிவிட்டு வேலையை தொடங்க இருந்தபோது, அலுவலர்களிடம் முழுவதுமாக கிணற்றை மூடிவிட்டு வேலையை தொடங்குமாறு பொதுமக்கள் வற்புறுத்தினர்.

நகர சாலையின் நடுவே 120 அடி கிணறு..!
author img

By

Published : Jun 15, 2019, 11:32 AM IST

நாகர்கோவில் டெரிக் சந்திப்பு அருகே குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. இதற்காக, நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது பள்ளத்தின் மீது போடப்பட்டிருந்த சிமெண்ட் அடுக்கை இடித்தபோது, அங்கு சுமார் 120 அடி ஆழமுள்ள கிணறு இருந்தது தெரியவந்தது. நட்ட நடு சாலையில் மறைந்திருந்த கிணறு கண்டுபிடிக்கப்பட்டது குறித்த தகவல் பரவியதும், அப்பகுதியில் பொதுமக்கள் ஏராளமானோர் அங்குத் திரண்டனர்.

உடனே கிணற்றை மீண்டும் அடுக்குகள் மூலம் மூடிவிட்டு, அங்கு பணியைத் தொடர ஊழியர்கள் முடிவு செய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கிணற்றை மண் போட்டு மூடி பணியைத் தொடருமாறு வலியுறுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சுரேஷ்ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உள்ளிட்ட அலுவலர்கள், 120 அடி ஆழமுள்ள கிணற்றைப் பார்வையிட்டனர். இதுகுறித்து மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன் கூறும்போது, ‘கிணற்றை தற்போது பழைய நிலையிலேயே மண்ணை நிரப்பி, அதன் மீது சிமெண்ட் அடுக்கை வைத்து மூடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவிலில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டும் போது சாலையில் 120 அடி ஆழ கிணறு கண்டறியப்பட்டது.

குமரி மாவட்டம், டெரிக் சந்திப்பு அருகே குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக, நேற்று ஜே.சி.பி., எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது பள்ளத்தில் மீது போடப்பட்டிருந்த சிமெண்ட் சிலாப்பை இடித்தபோது சத்தம் கேட்டது. உடனே அப்பகுதியில் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டுவதை நிறுத்தி விட்டு, ஊழியர்கள் மூலம் மணலை அகற்றினர். அப்போது மணலுக்குள் புதைந்திருந்த சிமெண்ட் சிலாப்பை அகற்றிய போது, அங்கு சுமார் 120 அடி ஆழமுள்ள கிணறு இருந்தது தெரியவந்தது.

நடுரோட்டில் மறைந்திருந்த கிணறு கண்டுபிடிக்கப்பட்டது குறித்த தகவல் பரவியதும், அப்பகுதியில் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். உடனே கிணற்றை மீண்டும் சிலாப்புகள் மூலம் மூடி விட்டு, அங்கு பணியை தொடர ஊழியர்கள் முடிவு செய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கிணற்றை மண் போட்டு மூடி பணியை தொடருமாறு வலியுறுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற திமுக எம்.எல்.ஏ., சுரேஷ்ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனர் சரவணகுமார் உள்ளிட்ட அதிகாரிகள், 120 அடி ஆழமுள்ள கிணற்றை பார்வையிட்டனர். 

இதுகுறித்து மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன் கூறும் போது, புத்தன் அணையில் இருந்து நாகர்கோவிலுக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்துக்காக சாலையில் புதிதாக குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு நாகர்கோவில் டெரிக் சந்திப்பு பகுதியில் பிரைட் தெருவில் குழி தோண்டிய போது, மூடப்பட்ட நிலையில் இருந்த பழைய காலத்து கிணறு கண்டு பிடிக்கப்பட்டது. அந்த கிணற்றை தற்போது பழைய நிலையிலேயே மண்ணை நிரப்பி, அதன் மீது சிமெண்ட் சிலாப் போட்டு மூடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.