ETV Bharat / state

மாதத் தேர்வில் 2 பாடங்களில் தோல்வி; 10ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை!

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் மாதத் தேர்வில் இரண்டு பாடங்களில் தோல்வியுற்றதால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

monthly test failing
author img

By

Published : Sep 4, 2019, 2:59 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள புத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் சுபா நந்தினி. இவரது மகன் யாகேஷ் (எ) சஜித் நாஜி (15). இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த யாகேஷ் தனது அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டார்.

நீண்ட நேரம் ஆகியும் சஜித் நாஜி கதவை திறக்காததால் சுபா நந்தினி சந்தேகமடைந்து அறையின் கதவை திறந்து பார்த்தபோது சஜித் நாஜி தூக்கில் தொங்கி இறந்துகிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்தார். இது குறித்து வடசேரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

School student suicide  பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை  நாகர்கோவில்  10th student suicide  nagarkovil  monthly test failing
தற்கொலை செய்துகொண்ட பத்தாம் வகுப்பு மாணவன்

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் சடலத்தைக் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனர். இதையடுத்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், சஜித் நாஜி பள்ளியில் நடைபெற்ற மாதத்தேர்வில் இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. மேலும், இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். தேர்வில் தோல்வியுற்றதால் மாணவன் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

மாதத் தேர்வில் தோல்வியடைந்த மாணவன் தற்கொலை

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பத்தாம் வகுப்பு மாணவன் மாத தேர்வில் இரண்டு பாடங்களில் தோல்வியுற்றதால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Body:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த புத்தேரி பகுதியை சேர்ந்தவர் சுபா நந்தினி. இவரது மகன் யாகேஷ் என்ற சஜித் நாஜி 15. இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10 ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று பள்ளி முடித்து வீட்டிற்கு வந்த யாகேஷ் தனது அறையில் சென்று இருந்துள்ளார். நீண்ட நேரமாக கதவு திறக்காததால் தாயார் சுபா நந்தினி இரவு அறையின் கதவை திறந்து பார்த்தபோது சஜித் நாஜி தூக்கில் பிணமாக தொங்கிகொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளார்.
இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் வடசேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடம் வந்த போலீசார் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், சஜித் நாஜி. மாத தேர்வில் இரண்டு பாடங்களுக்கு தோல்வி அடைந்ததால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தலில் தோல்வியுற்றதால் மாணவன் ஒருவன் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.