ETV Bharat / state

கஞ்சா விற்பனையில் தகராறு - இளைஞர் கொலை! - Youth murder

காஞ்சிபுரம்: கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தில் இளைஞர் கொலை  கஞ்சா விற்பனை செய்வதில் தகராறு இளைஞர் கொலை  கஞ்சா விற்பனை  Youth murder controversy over cannabis sale In kanchipuram  controversy over cannabis sale  cannabis sale
Youth murder
author img

By

Published : May 20, 2020, 1:23 PM IST

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூர் பகுதி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்(25). இவர் ஏனாத்தூரிலிருந்து ராஜகுலம் செல்லும் சாலையில் உள்ள காலிமனை இடத்தில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அவர் தனது நண்பர்களுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதில், நண்பர்கள் அஜித்தை கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அங்கு வந்தவர்கள் அஜித் உயிரிழந்திருப்பதைக் கண்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அஜித்தின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, துணைக் காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், காவல் ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா விற்பனை தொடர்பான மோதலாக இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மற்றொரு பொள்ளாச்சியா? மதுரையில் பரபரக்கும் பாலியல் குற்றச்சாட்டு - போலீசார் தீவிர விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.