செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு அஞ்சல் துறை சார்பில் செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு புதிய கணக்கு தொடங்கப்பட்டு கணக்கு புத்தகத்தை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், செய்யூர் சித்தாமூர் பகுதிக்குட்பட்ட காட்டுதேவாதூர், ஓணம்பாக்கம், நுகும்பல், நீர்பெயர் போன்ற பகுதிகளிலிருந்து வந்த 100 பெண் குழந்தைகளுக்கு சமூக ஆர்வலர் தேன்மொழி பிரவீன் குமார் தனது சொந்த செலவில் புதிய சேமிப்பு கணக்கு தொடங்கி புத்தகத்தை பெண் குழந்தைகளின் பெற்றோர்களிடம் வழங்கினார்.
இதையும் படிங்க: தூக்குத் தண்டனைக் கைதிகளை நேரில் ஆஜர்படுத்த உத்தரவு