ETV Bharat / state

ஆளுநர் உரை: தமிழ்நாடு மணல் லாரிகள் சங்கம் வரவேற்பு - ஆளுநர் உரை

மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் அறிவிப்பு வரவேற்கதக்கது என தமிழ்நாடு மணல் லாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆளுநர் பேசியது வரவேற்கதக்கது
ஆளுநர் பேசியது வரவேற்கதக்கது
author img

By

Published : Jun 21, 2021, 4:09 PM IST

Updated : Jun 21, 2021, 4:16 PM IST

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மணல் லாரிகள் சங்க கூட்டமைப்பு மாநில தலைவர் யுவராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, "கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மதுரவாயல் துறைமுகம் இடையிலான பறக்கும் சாலை திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தற்பொழுது பொறுப்பேற்றுள்ள திமுக அரசு தனது முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மதுரவாயில் - துறைமுகம் இடையிலான பறக்கும் சாலை திட்டம் நிறைவேற்றப்படும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகரப் பகுதிகளிலும் புறவழி சாலை அமைக்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியது வரவேற்கதக்கது.

இத்திட்டங்களை செயல்படுத்த உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" என யுவராஜ் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆளுநர் அறிக்கையில் முக்கிய அறிவிப்புகள் இல்லை - ஈபிஎஸ் குற்றச்சாட்டு

Last Updated : Jun 21, 2021, 4:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.