ETV Bharat / state

"இயற்கையை அழிப்பதால் தான் நோயின் பிடியில் சிக்குகிறோம்" நடிகர் சமுத்திரக்கனி! - ரோட்டரி கிளப்

காஞ்சிபுரம்: இயற்கையை அழிப்பதால் தான் கரோனா போன்ற கொடிய நோயின் தாக்குதலுக்கு ஆளாகிவருவதாக, நடிகரும், இயக்குநருமான சமுத்திரகனி தெரிவித்தார்.

சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி
author img

By

Published : Sep 5, 2020, 7:16 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் சென்னை ரோட்ரி கிளப் 3232 சார்பில், இயற்கையை மீட்டெடுக்கும் வகையில் காடு செய்வோம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வு மூலம் 1.5 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, இதில் வேங்கை, தேக்கு, பூவரசன், அத்தி, அரசமரம், இலுப்பை, கருவேம்பு உள்ளிட்ட அனைத்து வகையான 500க்கும் மேற்பட்ட நாட்டு மரங்கள் நடப்பட்டன.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி கிளப் கன்னிமரா மாவட்ட சேர்மன் சிவபால ராஜேந்திரன், நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி, ரயில்வே ஐஜி வனிதா சம்பத் ஐபிஎஸ் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர். இதுதொடர்பாக சமுத்திரக்கனி கூறுகையில்," இயற்கையை அழிப்பதால் தான் கரோனா போன்ற நோய்களின் பிடியில் மாட்டிக் கொண்டோம். இயற்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். அதற்கான முயற்சியாகத்தான் இதைப் பார்க்கிறேன்.

காடு செய்வோம் என்று ஒரு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது பத்தாக மாற வேண்டும். பத்து நூறாக மாற வேண்டும். நம் முன்னோர்கள், நம் மூத்த தலைமுறையினர் நமக்கு பாதுகாப்புக்காக கொடுத்து சென்ற இயற்கையை நாம் பாதுகாக்க வேண்டும். அதற்கான முயற்சியாக தான் இதைப் பார்க்கிறேன். இப்போது இருக்கின்ற தலைமுறையினர் தங்கள் கையில் எடுத்துள்ள 'காடு செய்வோம்' என்பது ஒரு பெரிய வெற்றியாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.