2021 சட்டப்பேரவை தேர்தலையொட்டி வாக்காளர்கள் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்வதற்கு ஏதுவாக வாக்காளர் சரிபார்ப்பு சிறப்பு முகாம் இரண்டாம் கட்டமாக இன்றும்(டிச.12), நாளையும்(டிச.13) தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாக்காளர் சரிபார்ப்பு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட காஞ்சிபுரம் பெரு நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு கா.மு.சுப்பராய முதலியார் பள்ளி, எஸ்.எஸ்.கே.வி.பெண்கள் மேல் நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் நடைபெற்று வரும் சரிபார்ப்பு சிறப்பு முகாமை திமுக மாநில மாணவரணி செயலாளரும், காஞ்சிபுரம் எம்எல்ஏவுமான எழிலரசன் இன்று(டிச.12) ஆய்வு மேற்கொண்டார்.
வாக்காளர் சரிபார்ப்பு சிறப்பு முகாமில் வாக்காளர்களுக்கு முறையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்றும், வாக்காளர் திருத்தம் குறித்த பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகின்றதா? உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கு வரும் புதிய வாக்காளர்கள், பொதுமக்கள் சமர்பிக்கும் ஆவணங்கள் முறையாக உள்ளனவா? எனவும் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது திமுக காஞ்சிபுரம் நகர செயலாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், நகர துணைத் தலைவர் கருணாநிதி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அரசியல் கட்சித் தலைவர்கள்!