காஞ்சிபுரம்: உத்தரமேரூர் அருகே பருத்திக்கொல்லை கிராமத்தில் ரஃபேல் லைஃப் கேர் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (ஆக.3) நடைபெற்றது.
ரஃபேல் கேர் மருத்துவமனை நிறுவன தலைவர் ஜான் லாசரஸ் தலைமையில் நடைபெற்ற இந்த அடிக்கல் நாட்டு விழாவில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர சைக்கிள்கள், பள்ளி சிறார்களுக்கு நோட்டு புத்தகம், பேனா உள்ளிட்ட தொகுப்புகளை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் உத்தரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினர் சுந்தர், ரஃபேல் கேர் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் கிங்ஸ்லி, திமுக ஒன்றிய செயலாளர்கள் கே.ஞானசேகரன், குமார், நகரச் செயலர் பாரிவள்ளல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.