ETV Bharat / state

பட்டு இழைத்து கொடுத்து நெசவாளர்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்! - Uthiramerur ADMK candidate V. Somasundaram collects votes

காஞ்சிபுரம்: உத்தரமேரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வி. சோமசுந்தரம் நெசவாளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று பட்டு இழைத்து கொடுத்து நெசவாளர் குடும்பங்களிடம் வாக்கு சேகரித்தார்.

முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம்  உத்திரமேரூர் அதிமுக வேட்பாளர்  உத்திரமேரூர் அதிமுக வேட்பாளர் வி.சோமசுந்தரம் வாக்கு சேகரிப்பு  Former Minister V. Somasundaram  Uthiramerur ADMK candidate V. Somasundaram collects votes  Uthiramerur ADMK candidate V. Somasundaram
Uthiramerur ADMK candidate V. Somasundaram
author img

By

Published : Mar 29, 2021, 11:44 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் உத்திரமேரூர் தொகுதிக்குள்பட்ட வாலாஜாபாத், காஞ்சிபுரம், ஒன்றியங்களைச் சேர்ந்த கிராமப்புறங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குள்பட்ட கோளிவாக்கம் புஞ்சை அரசந்தாங்கள், வளத்தோட்டம், குருவிமலை, களக்காட்டூர், ஐயங்கார் குளம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிமுக மற்றும் அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பட்டு இழைத்து கொடுத்து வாக்கு சேகரிக்கும் வி.சோமசுந்தரம்

ஐயங்கார் குளம் கிராமத்தில் பரப்புரை மேற்கொண்ட வி. சோமசுந்தரம் நெசவாளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று நெசவாளர்களுக்கு பட்டு இழைத்து கொடுத்து, தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது, அதிமுக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் தும்பவனம் டி.ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜூ, அதிமுக நிர்வாகிகள் கோல்ட்.ரவி, வெங்காடு உலகநாதன், அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: உத்திரமேரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பிரச்சாரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.