ETV Bharat / state

காஞ்சிபுரத்தில் விஷவாயு தாக்கி இரண்டு இளைஞர்கள் மரணம்! - விஷவாயு தாக்கி இருவர் பலி

காஞ்சிபுரம்: முத்தியால்பேட்டை கிராமத்தில் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்ய முயன்ற இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

corona
corona
author img

By

Published : Aug 20, 2020, 9:13 PM IST

நிலவுக்கு ஆள் அனுப்ப சோதனை நடத்தும் நாட்டில் மலக்குழி மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. மலக்குழி மரணங்கள், விஷவாயு மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை எதிர்த்து போராடும் மக்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை. விஷவாயு மரணங்களை தடுக்க சட்டத்தை வலுவாக்கி போராடும் மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் தீண்டாமை உணர்வுடன் செயல்படுகிறது.

தூய்மைப் பணியாளர்களை வேலைக்கு பணியமர்த்தும் இடத்திலிருந்து தொடங்கும் தீண்டாமை எண்ணத்தை எப்போது அகற்றும். இத்தொழிலில் ஈடுபடும் சக மனிதர்களின் மரணத்தை கைகட்டி வேடிக்கை பார்க்கும் அரசு எப்போது விழித்துக்கொள்ளும் என்பதே பலரது கேள்வியாக உள்ளது. விஷவாயு மரணத்திற்கு எதிராக போராடும் அதே நேரத்தில் மற்றொரு மரணம் நிகழ்வது வாடிக்கையாகிவிட்டது.

அந்தவகையில், காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டை கிராமத்தில் உள்ள கழிவு நீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றத்துடன் இருந்துள்ளது. இதனை சுத்தம் செய்ய அதேபகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் கழிவு நீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்ய முற்பட்டார். அப்போது விஷவாயு தாக்கி மயங்கிய நிலையில் உள்ளேயே இருந்துள்ளார்.

இதனையடுத்து மேலே நின்றிருத்த சுனில் என்பவர் லட்சுமணனை காப்பாற்ற முயன்றார். இருந்தும் இருவரும் விஷவாயு தாக்கி மயங்கினர். பின்னர் அப்பகுதி மக்கள் உடனடியாக காஞ்சிபுரம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வாலாஜாபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: உரிமையை மீட்டெடுத்த ஊராட்சி மன்ற தலைவர் - மாவட்ட ஆட்சியர், எஸ்பி முன்னிலையில் தேசியக் கொடி ஏற்றினார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.