ETV Bharat / state

வரதராஜபுரத்தில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு - வரதராஜபுரத்தில் விஷவாயு தாக்குதல்

காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரத்திலுள்ள குடியிருப்புப் பகுதியில் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு
விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு
author img

By

Published : Jan 19, 2022, 3:33 PM IST

காஞ்சிபுரம்: மணிமங்கலம் அருகே வரதராஜபுரம் பி.டி.சி. கோட்ரஸ் குடியிருப்புப் பகுதியில் ஜெயக்குமார் என்பவரது வீட்டில் ராஜேஷ் (35), ஏழுமலை (35) ஆகிய இருவர் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்துகொண்டிருந்தனர்.

அப்போது கழிவுநீர் தொட்டியிலிருந்து விஷவாயு தாக்கி எதிர்பாராதவிதமாக இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் இது குறித்து மணிமங்கலம் காவல் துறையினருக்கும், தாம்பரம் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

இத்தகவலின் அடிப்படையில் விரைந்துசென்ற தீயணைப்புத் துறையினர் கழிவுநீர் தொட்டியில் இறந்துகிடந்த இருவரின் உடலையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

மேலும் மணிமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: Aparna Yadav Exclusive: பாஜகவில் இணைந்தது ஏன்? அபர்ணா யாதவ் பிரத்யேகப் பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.